மல்லையாவின் சொத்துக்கள் இன்று ஏலம்

on Friday, 6 July 2012


புதுடில்லி: ரூ. 7 ஆயிரம் கோடி கடனில் சிக்கிய கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான இரு சொத்துக்கள் இன்று விற்பனையாகின்றன.எனினும் சொத்துக்களை மீட்க அந்நிறுவனத்தின் தலைவர் விஜய்மல்லையா முயற்சி மேற்கொண்டு வருகிறார். பெங்களூருவை தலைமையிடமாக ‌கொண்ட கிங்பிஷர் விமான நிறுவனம், பல்வேறு காரணங்களால் ரூ. 7,000 கோடி கடனில் சிக்கியது. மத்திய அரசும் கைவிரித்துவி்ட்டதால், சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் விஜய்மல்லையாவிற்கு சொந்தமான மும்பையில் உள்ள கிங்பிஷர் ஹவுஸ் கட்டடம் ( 81.6 கோடி), கோவாவில் உள்ள சொகுசுபங்களா (ரூ.36 கோடி) என இரு சொத்துக்கள் மற்றும் ரூ. 90.22 கோடி மதிப்புள்ள இரு ‌ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை, விற்பனையாக உள்ளன.இதில் கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்த பல்வேறுவங்கிகள் அதிகாரிகள் முன்னிலையில் விற்பனையாக உள்ளது.

0 comments:

Post a Comment