பட்டதாரிகளிடம் பணம் மோசடி வாலிபரிடம் காவலில் விசாரணை

on Tuesday, 30 April 2013
தினமலர் முதல் பக்கம் » காஞ்சிபுரம் மாவட்டம் »பொது செய்தி 
பதிவு செய்த நாள் : மார்ச் 14,2013,22:42 IST 
காஞ்சிபுரம்: கணினி நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பி.இ., பட்டதாரிகளை ஏமாற்றி, கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில், காவல் துறையினரால் தேடப்பட்டு, நீதிமன்றத்தில் சரணடைந்த வாலிபரை, காவல் துறையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் பி.இ., கணினி பட்டதாரிகளிடம், வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தனர். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, வினோத்குமாரை தேடினர். இந்நிலையில் கடந்த, 6ம் தேதி, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை காவலில் எடுத்து விசாரிக்க, காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க, அனுமதி அளித்து உத்தரவிட்டார்.அவரிடம் காவல் துறையினர் நேற்றே விசாரணையை துவக்கினர். விசாரணையில், அவர் எத்தனை பேரை ஏமாற்றி, எவ்வளவு பணம் பறித்து உள்ளார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார், என்ற விவரம் தெரிய வரும். 

0 comments:

Post a Comment